உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம்  ரூ.40 ஆக உயர்த்த வலியுறுத்தல்

குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம்  ரூ.40 ஆக உயர்த்த வலியுறுத்தல்

பெங்களூரு : பெங்களூரில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துமாறு, ஆட்டோ ஓட்டுநர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் 30 ரூபாயிலிருந்து 36 ரூபாயாக உயர்த்தி, பெங்களூரு கலெக்டர் ஜெகதீஷ், கடந்த 15ம் தேதி உத்தரவிட்டார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்டோ ரிக் ஷா ஓட்டுநர்கள் தொழிற்சங்கம், திருத்தப்பட்ட கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலர் ஷாலினிக்கு கடிதம் எழுதி உள்ளது.இது குறித்து தொழிற்சங்க பொது செயலர் டி.ராமமூர்த்தி கூறியதாவது:ஆட்டோ கட்டண உயர்வு, ஓட்டுநர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்த போவதில்லை. குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம், ஆறு ரூபாய் மட்டும் உயர்த்தி, 36 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை 40 ரூபாயாக உயர்த்த வேண்டும்.பெங்களூரில் செலவும், போக்குவரத்து நெரிசலும் அதிகம். இருப்பினும் மங்களூரு, உடுப்பி போன்ற மற்ற நகரங்களை விட பெங்களூரில் குறைவாகவே ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ