உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பல்லாரியில் 15 ஆண்டுகளாக மருத்துவமனை கட்டுவதால் அதிருப்தி

பல்லாரியில் 15 ஆண்டுகளாக மருத்துவமனை கட்டுவதால் அதிருப்தி

பல்லாரி: பொதுவாக ஒரு பெரிய மருத்துவமனைகட்டி முடிக்க, மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம். ஆனால் பல்லாரியில் அரசு மருத்துவமனை 15 ஆண்டுகளாக கட்டப்படுவதால், அம்மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பல்லாரி நகரில், பொது மக்களின் வசதிக்காக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட, மாநில அரசு திட்டமிட்டது. 2010ல் பா.ஜ., அரசு காலத்தில், மருத்துவமனை கட்டும் பணிகள் துவங்கின. இதற்காக 100 கோடி ரூபாய் வழங்கியது. அதன்பின் கூடுதலாக 24 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 124 கோடி ரூபாய் செலவிட்டும், இதுவரை பணிகள் முடியவில்லை. இம்மருத்துவமனை டில்லி எய்ம்ஸ் மருத்துவனை போன்று கட்டப்படுகிறது. பணிகள் தாமதமாவதால், செலவும் அதிகரிக்கிறது. பணிகளை முடிக்க, மேலும் 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த நிதியை வழங்க, அரசு தாமதம் செய்வதால் பணிகள் தாமதமாவதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்லாரி மாவட்டத்தில், அரசு சார்ந்த இரண்டு மருத்துவமனைகள் உள்ளன. இங்கு அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதால், சிகிச்சை அளிப்பது கஷ்டமாக உள்ளது. இதே காரணத்தால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட, அரசு முடிவு செய்தது. ஆனால் சரியான நேரத்தில் நிதி வழங்காததால், 15 ஆண்டுகளாகியும் பணிகள் முடியவடையாமல் நீண்டு கொண்டே செல்கிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வந்தால், நல்ல சிகிச்சை கிடைக்கும் என, எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விரைவில் நிதியுதவி வழங்கி பணிகளை முடித்து, மருத்துவமனையை திறக்கும்படி வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி