உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாய் கூட்டு பலாத்காரம் 4 வாலிபர்களுக்கு வலை

நாய் கூட்டு பலாத்காரம் 4 வாலிபர்களுக்கு வலை

பெங்களூரு: பெங்களூரில் போதையில், தெருநாயை கூட்டு பலாத்காரம் செய்த நான்கு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம், பெங்களூரின் பெல்லந்துார், சர்ஜாபூர் சாலை கோடட்டி கிராமம் அருகில் பெண் ஒருவர், அக்., 15ம் தேதி இரவு 10:30 மணியளவில் தெரு நாய்களுக்கு உணவு அளித்து கொண்டிருந்தார். சிறிது தொலைவில், நாயின் வித்தியாசமான ஓலம் கேட்டது. அத்திசையை நோக்கி சென்றார். அப்போது, குடிபோதையில் இருந்த நான்கு வாலிபர்கள், ஒரு நாயை பலாத்காரம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்பெண் கூச்சல் போட்டதும், நால்வரும் தப்பியோடினர்; நாயும் ஓடி விட்டது. இது தொடர்பாக, மறுநாள் வர்த்துார் போலீசில் அப்பெண் புகார் அளித்தார். அவர்கள் புகாரை பெற்று, பெல்லந்துார் போலீஸ் நிலையத்துக்கு மாற்றினர். வழக்கு பதிவு செய்த பெல்லந்துார் போலீசார், சுற்றுப்புற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இரண்டு வாரத்துக்கு மேலாக, 25 கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட நாயை கண்டுபிடித்தனர். மாநகராட்சி வனப்பிரிவு ஊழியர்கள் உதவியுடன், நாயை பிடித்தனர். நாய், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 'அதன் அறிக்கை கிடைத்த பின், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர்' என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !