மேலும் செய்திகள்
35 குவின்டால் அன்னபாக்யா அரிசி மீட்பு
1 hour(s) ago
மாயமான கடற்படை மாலுமி பாக்.,குடன் தொடர்பில் உள்ளாரா?
1 hour(s) ago
இணையதளம் துவங்க அமைச்சரவை துணை குழு முடிவு
1 hour(s) ago
பெங்களூரு: ''லால்பாக் பிரச்னை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். சட்டத்தையும், நிலத்தையும் எப்படி பாதுகாப்பது என்பது எனக்கு தெரியும்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரில் சுரங்கப்பாதை திட்டத்தை எதிர்த்தும், பூங்காக்களின் 5 சதவீத நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக, பெங்களூரு லால்பாக் பூங்காவில் பா.ஜ., தலைவர்கள் தலைமையில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் தொடர்பாக, பெங்களூரில் நேற்று முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி: லால்பாக் பிரச்னை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். சட்டத்தையும், நிலத்தையும் எப்படி பாதுகாப்பது என்பது எனக்கு தெரியும். பெங்களூரில் நான்கைந்து பூங்காக்களை கட்டுவோம். ஆனா ல், பா.ஜ., ஒரு பூங்காவை கூட கட்டவில்லை. இது குறித்து மீண்டும் ஆய்வு செய்வேன். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை கேட்பேன். பொதுமக்களின் ஆலோசனைகளை யும் எடுத்து கொள்வேன். பா.ஜ., பாதயாத்திரை மேற்கொள்வது நல்ல விஷயம். எங்களுக்கு நல்ல வாய்ப்பு வழங்கி உள்ளனர். இதற்கு பதிலடி கொடுப்பதில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல. நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் நாங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago