மேலும் செய்திகள்
தொழிலாளர் சங்க கூட்டம்
31-Jul-2025
பெங்களூரு: பெங்களூரில் இறந்த, ஒடிஷா நபரின் சவப்பெட்டியில் தவறான ஸ்டிக்கர் ஒட்டியதால், சடலங்கள் இடம் மாறி குழப்பம் ஏற்பட்டது. ஒடிஷாவின், முலிசிங் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் ஷா, 21. இவர் பெங்களூரின், தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவர் கடந்த 15ம் தேதியன்று, மின் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்ப, ஏற்பாடு செய்யப்பட்டது. அமரர் ஊர்தியில், சடலம் ஒடிஷாவுக்கு அனுப்பப்பட்டது. இதே அமரர் ஊர்தியில் மேற்கு வங்கத்தின், சிலிகுரியை சேர்ந்த வேறொரு நபரின் உடலும் இருந்தது. இரு சவப்பெட்டிகள் மீதும், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் உட்பட, மற்ற விபரங்கள் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் இரவு அமரர் ஊர்தி, ஒடிஷாவின், முலிசிங் கிராமத்தை அடைந்தது. ராகேஷ் ஷாவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த அமரர் ஊர்தி ஊழியர்கள், மேற்கு வங்கத்தின் சிலிகுரிக்கு புறப்பட்டனர். ராகேஷ் ஷாவின் சவப்பெட்டியை திறந்த குடும்பத்தினர், அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே ராகேஷ் ஷா உடல் இருக்கவில்லை. அது வேறு ஒருவரின் உடல். உடலை அனுப்ப ஏற்பாடு செய்த நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு, ராகேஷ் ஷா குடும்பத்தினர் தகவல் கூறினர். நிறுவனத்தினரும் அமரர் ஊர்தி ஊழியர்களை தொடர்பு கொண்டு, சடலம் மாறியதை கூறி மீண்டும் முலிசிங் செல்லும்படி கூறினர். அதன்பின் அமரர் ஊர்தி ஊழியர்கள், ராகேஷ் ஷாவின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு, மீண்டும் அந்த உடலை எடுத்துக்கொண்டு மேற்கு வங்கத்துக்கு சென்றனர். சவப்பெட்டியில் பெயர் ஸ்டிக்கரை மாற்றி ஒட்டியதே, குழப்பத்துக்கு காரணம் என, ராகேஷின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
31-Jul-2025