உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வறட்சி பகுதி அறிவிப்பு: சிவகுமார்

 மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வறட்சி பகுதி அறிவிப்பு: சிவகுமார்

பெங்களூரு: வறட்சி பாதித்த பகுதிகளை அறிவிப்பது எப்போது என்பது குறித்து, முதல்வர் சிவகுமார் பதில் அளித்துள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மாநிலத்தில் சில பகுதிகளில் மழை பெய்கிறது. பல இடங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் வறட்சி பாதித்த பகுதிகளை இப்போதே அறிவிக்க இயலாது. இம்மாத இறுதிக்குள் அனைத்து தகவல்களையும் திரட்டி, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, எந்தெந்த தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கலாம் என்று, வருவாய் துறை அமைச்சர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வார். அமைச்சரவையில் விவாதித்து முடிவு எடுப்போம். எதிர்க்கட்சியினர் நல்ல ஆலோசனை வழங்கினால் அதை ஏற்க தயாராக உள்ளோம். மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம், கர்நாடகாவில் நிலவும் வறட்சி பற்றி கூறினேன். தற்போது பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கிறது. நிலைமையை பொறுத்திருந்து பார்ப்போம் என்று என்னிடம் கூறினார். நாங்கள் கூட்டாட்சி அமைப்பின் கீழ் செயல்படுகிறோம். பிரதமரை, அனைத்து கட்சி குழு சந்திப்பது சாத்தியமாக அமையவில்லை. நாங்கள் நேரம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை