மேலும் செய்திகள்
உடல்நிலை பாதிப்பால் தாய், மகன் தற்கொலை
12-Jul-2025
ஹாவேரி: உருட்டுக்கட்டையால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஹாவேரி நகரின், நஜீகலகமாபுரா கிராமத்தில் வசித்தவர் சித்தப்பா தப்பண்ணவரா, 66. இவரது மனைவி லலிதவ்வா, 55. தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சித்தப்பா, தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்வார். அதே போன்று, நேற்று முன் தினம் இரவு 10:00 மணியளவில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த சித்தப்பா, லலிதவ்வாவை திட்டி, தகராறு செய்தார். தாக்கவும் செய்தார். தடுக்க வந்த மகன், மகள்களை அறையில் தள்ளிப் பூட்டினார். அதன்பின் உருட்டுக்கட்டையால் மனைவியின் தலையில் சரமாரியாக அடித்ததில், சம்பவ இடத்திலேயே லலிதவ்வா உயிரிழந்தார். மனைவி இறந்ததால், கிலியடைந்த கணவர் வீட்டை விட்டு வெளியேறினார். அங்கும், மிங்கும் அலைந்துவிட்டு நேற்று அதிகாலை கிராமத்தின் புறநகரில் உள்ள ஏரியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். அறையில் பூட்டப்பட்டிருந்த மகனும், மகள்களும் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் விடுவிக்கப்பட்டனர். தாய் கொலையானது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிராமத்துக்கு வந்த ஹாவேரி ஊரக போலீசார், லலிதவ்வாவின் உடலை கைப்பற்றினர். கொலையாளியை தேடிய போது, ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
12-Jul-2025