செப்., 30 முதல் அக்., 3 வரை தசரா சிறப்பு ரயில்கள் இயக்கம்
பெங்களூரு: 'தசராவுக்காக ஹூப்பள்ளியில் இருந்து யஷ்வந்த்பூர், யஷ்வந்த்பூரில் இருந்து விஜயபுராவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: l ரயில் எண்: 07379: எஸ்.எஸ்.எஸ்., ஹூப் பள்ளி - யஷ்வந்த்பூர் இடையே விரைவு ரயில், ஹூப்பள்ளியில் இருந்து, செப்., 30ம் தேதி மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு, அன்றிரவு 8:15 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும். இந்த ரயில், எஸ்.எம்.எம்., ஹாவேரி, ஹரிஹர், தாவணகெரே, அரிசிகெரே, துமகூரு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் ஒரு முறை மட்டுமே இயக்கப்படும். l எண் 06277: யஷ்வந்த்பூர் - விஜயபுரா சிறப்பு ரயில், யஷ்வந்த்பூரில் இருந்து செப்., 30ம் தேதி இரவு 9:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:30 மணிக்கு விஜயபுரா சென்றடையும். மறு மார்க்கத்தில் எண் 06278: விஜயபுரா - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், விஜயபுராவில் இருந்து அக்., 1ம் தேதி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:40 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வந்தடையும். இந்த ரயில்கள், துமகூரு, அரிசிகெரே, பிரூர், தாவணகெரே, ஹரிஹர், ராணிபென்னுார், எஸ்.எம்.எம்., ஹாவேரி, பாதாமி, பாகல்கோட், அலமாட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். l எண் 06279: யஷ்வந்த்பூர் - விஜயபுரா சிறப்பு ரயில், யஷ்வந்த்பூரில் இருந்து அக்., 2ம் தேதி இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு விஜயபுரா சென்றடையும். மறு மார்க்கத்தில் எண் 06280: விஜயபுரா - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், விஜயபுராவில் இருந்து அக்., 3ம் தேதி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:10 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வந்தடையும். இந்த ரயில்கள், துமகூரு, அரிசிகெரே, பிரூர், தாவணகெரே, ஹரிஹர், ராணிபென்னுார், எஸ்.எம்.எம்., ஹாவேரி, பாதாமி, பாகல்கோட், அலமாட்டி ரயில் நிலையங்களில் நிற்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.