உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிக்கியது குள்ளா யானை

சிக்கியது குள்ளா யானை

பெங்களூரு: சிக்கமகளூரு மற்றும் ஹாசன் மாவட்டங்களின் பல கிராமங்களுக்கு தலைவலியாக இருந்த, 'குள்ளா' யானை பிடிபட்டது.சிக்கமகளூரு மற்றும் ஹசன் மாவட்டங்களின், பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்களை, ஒற்றை காட்டு யானை நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வந்தது. இது மற்ற யானைகளை விட, குள்ளமாக இருந்ததால் 'குள்ளா' என அழைக்கப்பட்டது.ஹாசனின், சகலேஸ்புரா, பேலுார், சிக்கமகளூரின், மூடிகெரே தாலுகாவில் இந்த யானை அதிகமாக நடமாடியது. பயிர்களை பாழாக்கியது. விரட்டச் சென்றால் தாக்க முயற்சிக்கும். இதை கண்டுபிடிப்பது வனத்துறையினருக்கு பெரும்பாடாக இருந்தது.ஒரு நாள் ஒரு கிராமத்தில் இருந்தால், மறுநாள் வேறொரு கிராமத்தில் தென்பட்டு, ஆட்டம் காட்டியது. கடந்த நான்கைந்து நாட்களாக, மூடிகெரேவில் சுற்றித் திரிந்தது. இதை பிடிக்க வளர்ப்பு யானைகள் பீமா, ஏகலவ்யாவுடன் மூடிகெரேவில் முகாமிட்டனர்.நான்கு நாட்களாக அங்கும், இங்கும் தப்பியோடி 'குள்ளா' ஆட்டம் காட்டியது. வளர்ப்பு யானைகளும் விடாமல் 'குள்ளா'வை விரட்டி, நேற்று பிடித்தன. தங்களுக்கு தொந்தரவு கொடுத்த யானை சிறைபட்டதால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை