உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இ - பிரசாத் சேவை துவக்கம் வீடு தேடி வரும் கோவில் பிரசாதம்

இ - பிரசாத் சேவை துவக்கம் வீடு தேடி வரும் கோவில் பிரசாதம்

பெங்களூரு : 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்தால், மாநிலத்தின் முக்கிய கோவில்களின் பிரசாதங்கள் வீட்டிற்கே வரும் 'இ - பிரசாத்' சேவையை, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி துவக்கி வைத்தார்.கர்நாடகாவில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் சிலரால் செல்ல முடிவதில்லை. இத்தகையோரின் ஏக்கத்தை போக்க, ஹிந்து அறநிலைய துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.அறநிலைய துறைக்கு உட்பட்ட பெங்களூரு ஹலசூரு ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில்; பெங்களூரு ஜெயநகர் ஸ்ரீ விநாயகர் கோவில்; பெங்களூரு கவிபுரம் ஸ்ரீ கவிகங்காதரேஸ்வரர் கோவில்; மைசூரு நஞ்சன்கூடு ஸ்ரீ கண்டேஸ்வரர் கோவில்; கோலார் ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில்; மாண்டியா செலுவராயன சுவாமி கோவில்; உடுப்பி கொல்லுார் ஸ்ரீ மூகாம்பிகை கோவில்.பீதர் ஷேத்திர ஜாரணி நரசிம்மர் கோவில்; பெலகாவி ஸ்ரீ ரேணுகா எல்லம்மா கோவில்; தட்சிண கன்னடா ஸ்ரீ குக்கே சுப்பிரமணியர் கோவில்; பல்லாரியின் ஸ்ரீ கனக துர்கம்மா கோவில்; விஜயநகராவின் ஸ்ரீ மைலாரலிங்கேஸ்வரா கோவில்; கொப்பாலின் ஸ்ரீ ஹுலிகம்மா கோவில்; கலபுரகியின் ஸ்ரீ குருதத்தாத்ரேயர் கோவில்களின் பிரசாதம் பெற ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்பவர்களின் வீடு தேடி, பிரசாதம் வழங்க, சி.எஸ்.சி., இ - கவர்னன்ஸ் சர்வீஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசாத பாக்கெட்டில் கற்கண்டு, பாதாம், முந்திரி, திராட்சை, விபூதி, குங்குமம், வெற்றிலை, பூக்கள், துளசி இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை