உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தெருநாய் கடித்து முதியவர் பலி

 தெருநாய் கடித்து முதியவர் பலி

மங்களூரு: தெரு நாய் கடித்து குதறியதில் முதியவர் உயிரிழந்தார். தட்சிணகன்னடா மாவட்டம், உல்லால் தாலுகாவின் கும்பலா கிராமத்தில் வசித்தவர் தயானந்தா, 60. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. தினமும் இரவில், குடிபோதையில் சுற்றித்திரிந்துவிட்டு, ஒரு கடை முன் உறங்குவார். பொழுது விடிந்த பின், வீட்டுக்கு செல்வார். நேற்று முன் தினம் குடிபோதையில், கடை முன் படுத்திருந்தார். நேற்று அதிகாலை 3:30 மணியளவில் இவர் படுத்திருப்பதை, கடை உரிமையாளர் வினோத் பார்த்துள்ளார். காலையில் அவர் கடையை திறக்க வந்தபோது, தயானந்தா ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததும், அவரது கண்ணில் இருந்த விழிகள் உருண்டை வெளியே வந்து, பக்கத்து கடை முன் கிடந்தது. தயானந்தா பக்கத்தில் நாய் இருந்தது. அதுவே அவரை கடித்து குதறியிருப்பதாக கூறப்படுகிறது. கும்பலா கிராமத்தில் நீண்ட காலமாக தெரு நாய்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. சாலையில் நடமாடுவதே கஷ்டம். குழந்தைகள் வெளியே விளையாட கூட முடிவதில்லை. இப்போது நாய்க்கடிக்கு முதியவர் பலியாகி உள்ளார் என கிராமத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். தகவலறிந்து அங்கு வந்த உல்லால் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இது குறித்து வழக்குப் பதிவாகியுள்ளது. முதியவரை கடித்து கொன்றதாக கூறப்படும் நாயை, உள்ளாட்சி பணியாளர்கள் பிடித்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி