மின்கட்டணம் ரூ.20 லட்சம் தனியார் நிறுவனம் ஷாக்
பெங்களூரு: மூன்று மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட, தனியார் நிறுவனத்திற்கு 20 லட்சம் ரூபாய்க்கு பெஸ்காம் மின்கட்டண பில் கொடுத்துள்ளது.பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி அருகே விஜயபுரா டவுனில் எம்.எஸ்., என்ற பெயரில் உணவு, தின்பண்டம் தயாரிக்கும் நிறுவனம் துவங்கப்பட்டது. முறையாக மின்கட்டணம் செலுத்திய போதும், மூன்று மாதங்களுக்கு சேர்த்து 20 லட்சம் ரூபாய் மின்கட்டணம் என, பெஸ்காம் நேற்று பில் அனுப்பி உள்ளது.பில்லை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன உரிமையாளர் ரகு, பெஸ்காம் அலுவலகத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால் யாரும் எடுத்துப் பேசவில்லை.'பெஸ்காம் ஊழியர்கள் அலட்சியத்தால் தான் 20 லட்சம் ரூபாய்க்கு மின்கட்டண பில் வந்துள்ளது. மின்கட்டணத்தை செலுத்த மாட்டேன்' என, ரகு கூறி உள்ளார்.