உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அடுத்தாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை அமல்

அடுத்தாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை அமல்

சிக்கமகளூரு: ''ஆங்கிலம் பயிற்று மொழியாக இல்லாவிட்டால், பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, அடுத்த கல்வி ஆண்டு முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இரு மொழி பயிற்று முறை அறிமுகப்படுத்தப்படும்,'' என கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார். சிக்கமகளூரில் அவர் கூறியதாவது: ஆங்கிலம் பயிற்று மொழியாக இல்லாவிட்டால், பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, அடுத்த கல்வி ஆண்டு முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இரு மொழி பயிற்சி முறை அறிமுகப்படுத்தப்படும். இந்தாண்டே இதை துவங்க திட்டமிட்டிருந்தோம். இருப்பினும் ஆங்கிலம் கற்பிக்க தகுதியான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை காத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. முடிந்த இடங்களில் எல்லாம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, மாநிலத்தில் உள்ள 50 சதவீத பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை துவக்கினோம். தற்போது ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதுடன், புதிய ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்தாண்டு அனைத்து அரசு பள்ளிகளிலும் இரு மொழி வழி கல்வி துவங்கும். மாநிலத்தில் கர்நாடக பப்ளிக் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மட்டும் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்படாது. ஒரு அரசு பள்ளியில் ஒரே ஒரு குழந்தை இருந்தாலும், அவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும். கர்நாடகா பப்ளிக் பள்ளியை திறக்க கூடாது என்று சொல்ல உரிமையில்லை. ஏ.டி.பி., எனும் ஆசிய மேம்பாட்டு வங்கியிடம் இருந்து 2,500 கோடி ரூபாய் கடன் வாங்கி, 500 கர்நாடக பப்ளிக் பள்ளியை திறந்து உள்ளோம். அரசு பள்ளிகளுக்கு 18 ஆயிரம் ஆசிரியர்களும்; அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6,000 ஆசிரியர்களும் புதிதாக நியமிக்கப்படுவர். ஆண்டுதோறும் 5,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். முந்தைய அரசு 4,500 ஆசிரியர்களை மட்டுமே நியமித்திருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Abu Jameen Mettumangalathan
நவ 11, 2026 07:11

இதை ஏன் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதி உள்ளீர்கள் உங்கள் தாய்மொழி பற்றை காண்பிக்க உங்கள் தாய்மொழி எதுவாயினும் அந்த மொழியிலேயே எழுதியிருக்கலாம் சார்


Subash BV
நவ 10, 2026 16:29

AS LONG AS WE HAVE UNFIT MINISTERS LIKE THIS, WHO GETS SOLD FOR FOREIGNERS WE CANT EVEN DREAM TO DEVLOP OWR OWN MOTHER TONGUE AND DEVLOP OUR NATION LIKE GERMANY, RUSSIA OR JAPAN. THINK SERIOUSLY, HOW TO DEFEAT SUCH NONSENSE HUMANS. PUT THE BHARATH FIRST.


முக்கிய வீடியோ