மேலும் செய்திகள்
காட்டு யானை தாக்கி 'மாஜி' கவுன்சிலர் பலி
10-Mar-2026
குடகு: குடகு மாவட்டம், பொன்னம்பேட் தாலுகாவின் காயிமானி கிராமத்தில் வசித்தவர் ரது, 40. இவர் காபி விவசாயி. இவருக்கு குர்ச்சி - காயிமானி நடுவே, ஸ்ரீமங்களா என்ற கிராமத்தில் காபி தோட்டம் உள்ளது. தினமும் காலை தோட்டத்துக்கு சென்று, தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதேபோன்று, நேற்று காலை தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிரே வந்த காட்டு யானை, அவரை தாக்கி மிதித்து கொன்றது. இதை பார்த்த அப்பகுதியினர், வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், விவசாயியின் உடலை மீட்டனர். குர்ச்சி மற்றும் காயிமானி பகுதியில், சில நாட்களாக எட்டு முதல் 10 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்திலும் நடமாடுகின்றன. தோட்ட வேலைக்கு செல்ல கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் அஞ்சுகின்றனர். இவற்றில் ஒரு யானை, நேற்று காபி விவசாயியை கொன்றுள்ளது. இனியாவது விழித்து கொண்டு, யானைகளை வனத்துக்குள் விரட்டும்படி, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.
10-Mar-2026