உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / லால்பாகில் மிதக்கும் பூங்கா; ஏப்., இறுதியில் பணி நிறைவு

லால்பாகில் மிதக்கும் பூங்கா; ஏப்., இறுதியில் பணி நிறைவு

பெங்களூரு; பெங்களூரின் லால்பாக் பூங்காவில், ஸ்ரீநகரின் தால் சரோவர் போன்று, மிதக்கும் பூங்கா அமைக்க தோட்டக்கலைத் துறை திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரின் லால்பாக் பூங்கா, சுற்றுலா பயணியருக்கு மிகவும் பிடித்தமானது. தினமும் பல ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.காலை, மாலையில் நடைபயிற்சி செய்யவும் பெருமளவில் மக்கள் வருகின்றனர்.லால்பூங்காவில் அபூர்வமான தாவரங்கள், மரம், செடி, கொடிகள் உள்ளன. மேலும் சுற்றுலா பயணியரை ஈர்க்க, நாங்கள் திட்டம் வகுத்துள்ளோம். இதற்கு முன்பு பூங்காவின் தாமரைக்குளத்தில், 4.45 லட்சம் ரூபாய் செலவில் மிதக்கும் பூங்கா அமைக்கப்பட்டது. அது வெற்றி அடைந்தது. சுற்றுலா பயணியரிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.தற்போது பூங்காவின் பெரிய ஏரியில், மிதக்கும் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு தோட்டக்கலைத் துறை, ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை.இதற்கான பொறுப்பை, தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றுள்ளது. இம்மாதம் இறுதியில் பணிகள் முடியும்.மிதக்கும் பூங்கா ஸ்ரீநகரின், தால் சரோவர் போன்று இருக்கும். ஏரி நீரின் தரத்தை உயர்த்தவும், பூங்காவை மேலும் அழகாக்கவும், இத்திட்டம் உதவும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி