மேலும் செய்திகள்
குடியை நிறுத்திய வாலிபர் வீடு வீடாக சென்று பிரசாரம்
4 minutes ago
பாதரசத்தை உடலில் செலுத்தி மனைவியை கொன்ற கணவர்
25-Nov-2025
விமான பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த விமானி
25-Nov-2025
பெங்களூரு: கர்நாடக ராஜ்யோத்சவா மற்றும் குழந்தைகள் தினத்தையொட்டி, முதன் முறையாக கப்பன் பூங்காவில் மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல், டிசம்பர் 7ம் தேதி வரை மலர் கண்காட்சி நடக்கவுள்ளது. இதுகுறித்து, கப்பன் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது: இது வரை லால்பாக் பூங்காவில் மட்டுமே, சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. முதன் முறையாக, கன்னட ராஜ்யோத்சவா, குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் நோக்கில், கப்பன் பூங்காவில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். குழந்தைகளை மகிழ்விப்பது, இதன் முக்கிய நோக்கம். இன்று முதல், டிசம்பர் 7ம் தேதி வரை, மலர் கண்காட்சி நடக்கும். பூங்காவில் புலி, சிங்கம், சிறுத்தை, யானை உட்பட, பல்வேறு வன விலங்குகள், பட்டாம்பூச்சிகள், பழங்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 25,000க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியில் போன்சாய் செடிகளின் கண்காட்சி, ஓவிய கண்காட்சி, சிறார்களுக்கு ஓவிய போட்டி ஆகியவையும் இருக்கும். ராணுவ ஆயுதங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கப்பன் பூங்காவின் பேண்ட் ஸ்டாண்ட் வளாகத்தில், தோட்டக்கலைத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன், மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார். 30ல் மாறு வேடப்போட்டி, கப்பன் பூங்கா நடைப்பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் கோலப்போட்டி, நடன போட்டி, ஓவிய போட்டிகள் நடத்தப்படும். டிசம்பர் 3, 4, 5ம் தேதிகளிலும் பல விதமான போட்டிகள் நடத்தப்படும். தினமும் பேண்ட் ஸ்டாண்டில் போலீஸ் அல்லது ராணுவ பேண்ட் வாசிப்பு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். டிசம்பர் 7ல் மலர் கண்காட்சி முடியும். தோட்டக்கலைத்துறை 38 லட்சம் ரூபாய் செலவில், இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. கண்காட்சி நடக்கும் 11 நாட்களும், காலை 6:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, பார்க்கலாம். பெரியவர்களுக்கு தலா 30 ரூபாய், சிறியவர்களுக்கு 10 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். ஆனால் அவர்கள் பள்ளி அடையாள அட்டையை காட்ட வேண்டும். அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்களை, ஆசிரியர்கள் அழைத்து வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.
4 minutes ago
25-Nov-2025
25-Nov-2025