உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயலில் நாளை புஷ்ப பல்லக்கு விழா

 தங்கவயலில் நாளை புஷ்ப பல்லக்கு விழா

தங்கவயல்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில், நாளை புஷ்ப பல்லக்கு திருவிழா நடக்கிறது. தங்கவயலில் பிரசித்தி பெற்ற பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில், 91 ம் ஆண்டு பிரம்மோத்சவம், பிப்ரவரி 25ம் தேதி துவங்கியது. இதன் முத்தாய்ப்பாக முதலியார் சங்கத்தின் புஷ்ப பல்லக்கு நாளை நடக்கிறது. காலை, 8:30 மணி முதலே அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள், பிரசாத வினியோகம், மதியம் அன்னதானம், மாலையில் கலை நிகழ்ச்சிகள், பக்தி இசை, இன்னிசை கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. இரவு 10:30 மணிக்கு மல்லிகை, முல்லை, செவ்வந்தி, ரோஜா, தாமரை என, பல வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கு நகர்வலம் வருகிறது. திருவிழாவை முன்னிட்டு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், விடிய விடிய பஸ்களை இயக்குகிறது. வழி நெடுகிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது; போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பல இடங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி