ஹனி டிராப் வலையில் சிக்குவோர் முட்டாள்கள்
பெங்களூரு; காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., தேஷ்பாண்டே பெங்களூரின், விதான் சவுதா அருகில் நேற்று அளித்த பேட்டி:ஹனிடிராப் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் இத்தகைய செயல்கள் நல்லது அல்ல. ஹனிடிராப் வலையில் விழுவோர், முட்டாள்கள் இல்லாமல் வேறு என்ன? இவர்கள் பெரிய முட்டாள்கள் தான்.யாராக இருந்தாலும் நற்பண்புகள் மிகவும் முக்கியம். எந்த துறைகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், கண்ணியம், கவுரவம், கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். குறிப்பாக அரசியலில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் அடி எடுத்து வைக்க வேண்டும்.கவுரவத்துக்கு களங்கம் ஏற்பட்டால், அதை சரி செய்து கொள்ளவே முடியாது. ஹனிடிராப் பின்னணியில் இருப்போர் மீது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.