ஹிமவத் கோபால சுவாமி மலை கட்டுப்பாடுகளை மீறும் வனத்துறை
சாம்ராஜ்நகர் : ஹிமவத் கோபாலசுவாமி மலையில், மலையாள திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதியளித்து, சர்ச்சையை ஏற்படுத்திய வனத்துறை ஊழியர்கள், தற்போது மற்றொரு குளறுபடி செய்துள்ளனர்.சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில் உள்ள பண்டிப்பூர் வனப்பகுகுதி, பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயமாகும். இந்த வனப்பகுதியில் உள்ள ஹிமவத் கோபாலசுவாமி மலை, வரலாற்று பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்தகைய மகத்துவமான இடத்தில், மலையாள திரைப்பட படப்பிடிப்புக்கு, வனத்துறையினர் அனுமதி அளித்திருந்தனர்.கோவில் படிகளிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். படப்பிடிப்புக்கு அனுமதியளித்த வனத்துறையினரை கண்டித்தனர்.இந்நிலையில் வனத்துறையினர் மற்றொரு குளறுபடி செய்துள்ளனர். ஹிமவத் கோபாலசுவாமி மலைக்கு செல்ல மாலை 4:30 மணி வரை மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் வனத்துறை ஊழியர்கள், பணத்தாசையால் மாலை 4:30 மணிக்கு பின்னர், தங்கள் வாகனத்தில் சுற்றுலா பயணியரை மலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. வனத்துறையினர் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.