உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாஜி ஐ.பி.எஸ்., அதிகாரி மருமகன் மாயம்

 மாஜி ஐ.பி.எஸ்., அதிகாரி மருமகன் மாயம்

பெங்களூரு: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பாஸ்கர்ராவ் மருமகனை, எட்டு நாட்களாக காணவில்லை; போலீசார் தேடுகின்றனர்.

இது குறித்து, 'எக்ஸ்' வலை தளத்தில் பாஸ்கர்ராவ் கூறியிருப்பதாவது:

என் மருமகன் அனிருத் ரமேஷை, எட்டு நாட்களாக காணவில்லை. அவருக்கு 32 வயதாகிறது. பெங்களூரின் ஹனுமந்தநகரில் வசிக்கும் அவர், தெற்கு பெங்களூரின், பிரபலமான கல்லுாரியில், மனோ அறிவியல் பாடத்தின் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். மிகவும் மென்மையான குணம் உள்ளவர். திலக்நகர் டி.சி.பி., தலைமையில், போலீசார் அனிருத் ரமேஷை தேடுகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவரை கண்டுபிடிக்க உதவுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை