உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கஷ்ட காலத்தில் நண்பர்களை கைவிடக்கூடாது; உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் தத்துவம்

 கஷ்ட காலத்தில் நண்பர்களை கைவிடக்கூடாது; உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் தத்துவம்

பெங்களூரு: ''கஷ்டமான காலத்தில் நண்பர்களை கைவிட கூடாது,'' என்று, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தத்துவம் பேசி உள்ளார். உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் மாலையில் பெங்களூரு வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், சதாசிவநகரில் உள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டிற்கு இரவில் சென்றார். இருவரும் அரை மணி நேரம் உரையாடினர். இந்த சந்திப்புக்கு பின், அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டி: பீஹார் தேர்தல் பிரசாரத்துக்கு நான் சென்றிருந்தேன். தேஜஸ்வி யாதவ் அலை வீசியது. மக்கள் மாற்றத்தை விரும்பினர். வேலையின்மை, விலைவாசி உயர்வை கண்முன் காண முடிந்தது. ஆனாலும் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வென்றது எப்படி என்று தெரியவில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த போது, போலீஸ் அதிகாரிகளை பயன்படுத்தி பா.ஜ., ஓட்டு திருட்டில் ஈடுபட்டது. பீஹாரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, பெண்கள் வங்கிக்கணக்கில் தலா 10,000 ரூபாயை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு டிபாசிட் செய்து உள்ளது. இதை ஏன் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. அவர்களை போன்று நாமும் செய்தால் தான் வெற்றி பெற முடியுமா என்பது தான் எனது கேள்வி. நாங்கள், காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளோம். அவர்கள் எங்கள் நண்பர்கள். கஷ்ட காலத்தில் நண்பர்களை கைவிட கூடாது. கூட்டணியில் சீர்திருத்தம் செய்வது பற்றி இப்போது எதுவும் பேச மாட்டேன். நேரம் வரும்போது எனது கருத்தை கூறுவேன். கர்நாடகாவில் புல்டோசர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். உத்தரபிரதேசத்தில் புல்டோசர் ராஜ்ஜியம் செய்வதை, உச்ச நீதிமன்றம் கண்டித்து உள்ளது. உத்தர பிரதேசத்தில் மீண்டும் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை