மேலும் செய்திகள்
செயின் திருட்டு மூவர் கைது
23-Apr-2025
பெங்களூரு: பல்வேறு வழக்குகளில் போலீசாரால் மீட்கப்பட்ட நகைகள், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை கமிஷனர் தயானந்தா நேற்று பார்வையிட்டார்.பின், அவர் அளித்த பேட்டி:பெங்களூரு எலஹங்கா பகுதியில், கடந்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி ஒரு வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தீபக், அன்சுகுமார் ஆகிய 2 பேரை, எலஹங்கா போலீசார் கடந்த 12ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 180 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.இதுபோன்று கடந்த 12ம் தேதி மொபைல் சர்வீஸ் கடையில் திருடிய இருவரை, எலஹங்கா போலீசார் 14ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 மொபைல் போன்கள், ஒரு லேப்டாப் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 1.40 லட்சம் ரூபாய்.இவ்வாறு அவர் கூறினார்.
23-Apr-2025