உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கார் மீது சரக்கு வேன் மோதல் தெலுங்கானாவின் நால்வர் பலி

கார் மீது சரக்கு வேன் மோதல் தெலுங்கானாவின் நால்வர் பலி

பீதர்: நீலம்மனள்ளி அருகில் கார் மீது, சரக்கு வேன் மோதியதில், தெலுங்கானாவை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். பீதர் மாவட்டம், பால்கி தாலுகாவின், நீலம்மனள்ளி தான்டா அருகில், நேற்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் மீது இதே வழியாக, வேகமாக வந்த சரக்கு வேன் மோதியது. காரில் இருந்த நவீன், 25, ராஜப்பா, 45, நாகராஜ், 40, ஆகியோர் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த காசிநாத், கார் ஓட்டுநர் பிரதாப் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் காசிநாத் உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்கள், தெலுங்கானாவின், சங்காரெட்டி மாவட்டம், நாராயணகேட் தாலுகாவின், ஜெகந்நாதபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கலபுரகி மாவட்டத்தின், கானகாபுரா தத்தாத்ரேய சுவாமி கோவிலுக்கு சென்றிருந்தனர். தரிசனம் முடிந்து காரில் ஊருக்கு திரும்பும்போது, விபத்து நடந்துள்ளது. விபத்து காரணமாக, அந்த சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தன்னுார் போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு, கார் மற்றும் சரக்கு வேனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை