உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி என கூறி பணம் பறித்த 4 பேர் கைது

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி என கூறி பணம் பறித்த 4 பேர் கைது

சேஷாத்ரிபுரம் : பிரபல 'கேங்ஸ்டர்' லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி என்று கூறி, தொழிலதிபர்களிடம் பணம் பறித்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் வசிப்பவர் 55 வயது தொழில் அதிபர். கடந்த 8ம் தேதி இரவு இவரிடம் மொபைல் போனில் பேசிய ஒருவர், 'நாங்கள் 'கேங்ஸ்டர்' லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள். எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உனது மகனை கடத்தி செல்வோம்' என மிரட்டினர். பயந்து போன தொழிலதிபர், சேஷாத்திரிபுரம் போலீசில் புகார் செய்தார். தொழிலதிபருக்கு வந்த மொபைல் போன் அழைப்பை வைத்து விசாரித்தபோது, பெங்களூரு ஜே.சி.நகரை சேர்ந்த முகமது ரபீக் மிரட்டியது தெரிந்தது.முகமது ரபீக்கை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்பேரில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிசுபால் சிங், வான்ஷ் தேவ், அமித் சவுத்ரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் நான்கு பேரும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் இல்லை என்பதும், அவரது கூட்டாளிகள் என்று பொய் சொல்லி, தொழிலதிபர்களை குறிவைத்து பணம் பறித்ததும் தெரிந்தது. டில்லி போலீசாரால் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ரபீக், திஹார் சிறையில் இருந்தார். அங்கு வைத்து அவருக்கு மற்ற 3 பேருடன் பழக்கம் ஏற்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த பின், தொழிலதிபர்களை மிரட்டுவதை வழக்கமாக வைத்திருந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை