உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை கொன்ற மனைவி உட்பட நால்வர் கைது 

கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை கொன்ற மனைவி உட்பட நால்வர் கைது 

சிக்கமகளூரு : தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவி உட்பட, நால்வர் கைது செய்யப்பட்டனர்.சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின் கடுஹினபைலு கிராமத்தின் பஸ் நிலையம் அருகில், இம்மாதம் 24ம் தேதி அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் அங்கு வந்து, உடலை மீட்டு அந்நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.விசாரணையில் அந்நபர், என்.ஆர்.புராவை சேர்ந்த சுதர்சன், 40, என்பது தெரிந்தது. அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரது மனைவி கமலா, 35, தன் கணவரை யாரோ கொலை செய்துள்ளனர் என, புகார் அளித்தார்.கொலையாளிகளை கண்டுபிடிக்க, போலீசாரும் இரண்டு தனிப்படைகளை அமைத்தனர். போலீசார் விசாரித்தபோது, கமலாவுக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதும், இதன் காரணமாக தம்பதி இடையே சண்டை நடந்ததும் தெரிந்தது.இதையடுத்து, போலீசாரின் பார்வை கமலா மீது திரும்பியது. அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, கொலை ரகசியம் அம்பலமானது.சுதர்சனும், கமலாவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சமீப நாட்களாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது; தினமும் சண்டை போட்டனர்.இதற்கிடையே கமலாவுக்கு அதே கிராமத்தில் வசிக்கும் சிவராஜுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்தார். எனவே கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.சம்பவத்தன்று கணவர் குடிக்கும் மதுபானத்தில் துாக்க மாத்திரையை கமலா கலந்தார். சுதர்சன் சுயநினைவை இழந்தார். அதன்பின் கள்ளக்காதலன் சிவராஜை வரவழைத்தார். இருவரும் சேர்ந்து, சுதர்சன் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.அதன்பின் சிவராஜின் கூட்டாளிகள் இருவரின் உதவியுடன், உடலை கொண்டு சென்று பஸ் நிலையம் அருகில் வீசியது, விசாரணையில் தெரிந்தது. கமலா, சிவராஜ் உட்பட நான்கு பேரை போலீசார், நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை