காஸ் கசிந்து தீ 4 பேர் பரிதாப பலி
ராம்நகர்: பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகர் தாலுகாவின், பீமனஹள்ளி அருகில் உள்ள ஷெட்டில், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஏழு தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். அக்டோபர் 7ம் தேதியன்று, ஷெட்டில் இருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. ஏழு பேரும் பலத்த காயமடைந்து, பெங்களூரின் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, ஷபிஜுல் ஷேக், மன்ரோல் ஷேக், ஜியாபுர் ஷேக், ஜாயித் அலி ஆகிய நால்வர் நேற்று உயிரிழந்தனர். மற்ற மூவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.