உள்ளூர் செய்திகள்

கேம் ஆன் 1.2..3...

- நமது நிருபர் -: தங்கம் வென்ற தேஜஸ்வினி குண்டு எறிதல் போட்டியில், 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், மாநில அளவில் சிறந்த வீராங்கனையாக திகழுபவர் தேஜஸ்வினி, 15. பெங்களூரைச் சேர்ந்த இவர், ஏற்கனவே மாவட்டல, மாநில அளவிலான பல போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். இவர் கடந்த வாரம் சென்னையில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில், குண்டு எறிதலில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், கர்நாடகாவின் சார்பாக பங்கேற்றார். இவர், 13.48 மீட்டர் துாரம் குண்டு எறிந்து, தங்கப் பதக்கம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !