உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஏ.டி.எம்., இயந்திரம் கொள்ளை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற கும்பல்

 ஏ.டி.எம்., இயந்திரம் கொள்ளை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற கும்பல்

பெலகாவி: ஏ.டி.எம்., மையத்துக்குள் புகுந்த மர்ம கும்பல், பணம் இருந்த இயந்திரத்தை, தள்ளுவண்டியில் வைத்து எடுத்து சென்றது. கர்நாடகாவில் ஆங்காங்கே, ஏ.டி.எம்., மையங்களில் கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. வங்கிகளிலும் மர்ம கும்பல் கைவரிசையை காட்டுகிறது. இதேபோன்று, பெலகாவியில் ஏ.டி.எம்., கொள்ளை நடந்துள்ளது. பெலகாவி நகரின், ஹொச வன்டமூரி கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலை - 48ல், ஒரு வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, மூன்று மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தள்ளுவண்டியை கொண்டு வந்திருந்தனர். ஏ.டி.எம்.,மில் நுழைந்த மர்ம கும்பல், முதலில் கண்காணிப்பு கேமராக்கள் மீது, பிளாக் பெயின்டை ஸ்ப்ரே செய்தனர். அதன்பின் ஏ.டி.எம்., இயந்திரத்தை பெயர்த்து எடுத்து வெளியே கொண்டு வந்து, தள்ளி வண்டியில் வைத்து கொண்டு சென்றனர். ஏ.டி.எம்., மையத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவு தள்ளுவண்டியை தள்ளி சென்று, அங்கிருந்த தங்களின் வாகனத்தில் ஏ.டி.எம்., இயந்திரத்தை வைத்து கொண்டு தப்பியோடினர். இதில் 1 லட்சத்துக்கும் அதிகமான பணம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. நேற்று காலை ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க வந்தவர்கள், இயந்திரத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காகதி போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, மர்ம கும்பல் ஏ.டி.எம்., இயந்திரத்தை தள்ளுவண்டியில் வைத்து சென்ற காட்சி பதிவாகியிருந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை