உலகளாவிய திருக்குறள் மாநாடு ஜனவரியில் பெங்களூரில் நடக்கிறது
பெங்களூரு: பெங்களூரில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கும், உலகளாவிய திருக்குறள் மாநாடு, அனைவராலும் அதிகம் பேசப்படும் மாநாடாக அமையும்,'' என்று, தாய்மொழி கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி.குமார் உறுதியாக கூறி உள்ளார். பெங்களூரு துாரவாணிநகரில் உள்ள பெங்களூரு தமிழ் மன்றத்தில், தீபாவளியை ஒட்டி பாவாணர் பாட்டரங்கம் நடந்தது. பாட்டரங்க பொறுப்பாளர் ராம இளங்கோவன் தலைமை வகித்தார். மன்ற செயலர் மாசிலாமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவரும், தாய்மொழி கூட்டமைப்பு தலைவருமான எஸ்.டி.குமார் பங்கேற்றார். தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் பேசியதாவது: கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டும் வகையில், பெங்களூரில் அடுத்த ஆண் டு ஜனவரியில் உலகளாவிய திருவள்ளுவர் மாநாட்டை நடத்த உள்ளோம். புனித வளா னர் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழி கூட்டமைப்பு இணை ந்து நடத்தும் மாநாடு 'திருக்குறள் வழிகாட்டும் மனிதநேயம்' என்ற தலைப்பில் நடக்கிறது. மாநாட்டில் பல பல்கலைக்கழகங்கள், தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ளும். மாநாட்டிற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சிறப்பான ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்படும். இம்மாநாடு உலகளவில் பேசும் மாநாடாக அமையும் என்று நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.