உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நர்ஸ் ஸ்வாதி குடும்பத்திற்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் 

நர்ஸ் ஸ்வாதி குடும்பத்திற்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் 

பெங்களூரு: கொலை செய்யப்பட்ட நர்ஸ் ஸ்வாதி குடும்பத்திற்கு, அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.ஹாவேரி ராட்டிஹள்ளி மசூரு கிராமத்தின் ரமேஷ். இவரது மகள் ஸ்வாதி, 22. தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்தார். காதல் விவகாரத்தில் கடந்த 3ம் தேதி ஸ்வாதி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்து உடலை ஆற்றில் வீசிய காதலன் நயாஸ், கொலைக்கு உதவிய வினய், துர்காச்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் அரசு மீது, ஹிந்து அமைப்புகள் கோபத்தில் உள்ளனர்.இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையாவை, ஹாவேரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவானந்த் பாட்டீல், ஹிரேகெரூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., யு.பி.பனகர் நேற்று சந்தித்து பேசினர். ஸ்வாதி குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.'கொலை செய்யப்பட்ட ஸ்வாதி குடும்பத்திற்கு நீதி வழங்குவதில் நான் உறுதியாக உள்ளேன். கைதான மூன்று பேரும் கடுமையாக தண்டிக்கப்படுவர். வழக்கு விசாரணையில் அலட்சியம் காட்ட கூடாது என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்' என்று, சிவானந்த் பாட்டீலிடம், சித்தராமையா கூறினார்.இந்த சந்திப்புக்கு பின், ஸ்வாதி குடும்பத்திற்கு அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று, அமைச்சர் சிவானந்த் பாட்டீல் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ