உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு எஸ்மா மிரட்டல்

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு எஸ்மா மிரட்டல்

பெங்களூரு: 'போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது 'எஸ்மா' சட்டம் பாயும்' என, மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, கர்நாடகாவின் பி.எம்.டி.சி., - கே.எஸ்.ஆர்.டி.சி., - என்.டபிள்யூ.ஆர்.டி.சி., - கே.கே.ஆர்.டி.சி., ஆகிய நான்கு போக்குவரத்துக் கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.இந்நிலையில் மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:போக்குவரத்து ஊழியர்கள், அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. மீறி ஈடுபட்டால், அவர்கள் மீது 'எஸ்மா' சட்டம் பாயும். இச்சட்டத்தின்படி, போராட்டத்தில் ஈடுபடுவோரை வாரன்ட் இல்லாமல் கைது செய்ய முடியும்.கைது செய்யப்பட்டவர்களை ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம். போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள நிலுவை தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற சலுகைகள் கிடைக்காது.இச்சட்டம் 1994ம் ஆண்டு வரைவு செய்யப்பட்டு, 2013ம் ஆண்டு மாநிலத்தில் இயற்றப்பட்டது. 2015ல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தியாவசிய சேவைகளுக்கு பிரச்னை ஏற்படும்போது, சட்டம் அமல்படுத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சட்டத்தால், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ