மேலும் செய்திகள்
3 யானைகளுக்கு ராஜ உபசரிப்பு
9 hour(s) ago
செய்திகள் சில வரிகளில்
9 hour(s) ago
தொட்டபல்லாபூர்: பெங்களூரு ரூரல் மாவட்டம் தொட்டபல்லாபூர் தாலுகாவின் முத்துார் கிராமத்தை சேர்ந்தவர் இர்பானா, 42. இவரது பேத்திகள் ருகியா, 13, மற்றும் ராகியா, 8; பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால், ஆந்திராவின் ஹிந்துப்பூரில் இருந்து பாட்டி வீட்டுக்கு வந்திருந்தனர். விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்தது. எனவே, பேத்திகளை ஹிந்துப்பூருக்கு அழைத்து செல்வதற்காக, நேற்று அதிகாலை இர்பானா புறப்பட்டார். தொட்டபல்லாபூர் ரயில் நிலையத்துக்கு மூவரும் வந்து கொண்டி ருந்தனர். வழியில் நடை மேம்பாலம் இல்லாததால், தண்ட வாளத்தை கடந்து சென்றனர். இதனால், திருப்பத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதை கவனிக்கவில்லை. ரயில் மோதியதில் பாட்டியும், பேத்திகளும் உடல் சித றி உயிரிழந்தனர். தொட்டபல்லாபூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago