பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி மரணம்
துமகூரு: சின்னசாமி மைதான கூட்டநெரிசலில் பேரன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் பாட்டி நேற்று உயிரிழந்தார்.பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்.சி.பி., அணியின் பாராட்டு விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் துமகூரு, குனிகலை சேர்ந்த மனோஜ்குமார், 19, உயிரிழந்தார்.இதை அறிந்த மனோஜின் பாட்டி தேவிரம்மா, 70, பேரன் இறந்த சோகத்தில் அழுது கொண்டே இருந்தார். இதில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. படுத்த படுக்கையாக இருந்தார். நேற்று அவர் உயிரிழந்தார்.இது குடும்பத்தினரிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.