உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிரேட்டர் பெங்களூரு ஆணைய 2வது திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

 கிரேட்டர் பெங்களூரு ஆணைய 2வது திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

பெலகாவி: கிரேட்டர் பெங்களூரு ஆணைய, 2வது திருத்த மசோதாவுக்கு, சட்டசபையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடக்கும், சட்டசபை கூட்டத்தொடரில், துணை முதல்வர் சிவகுமார், கிரேட்டர் பெங்களூரு ஆணைய, 2வது திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசியதாவது: கிரேட்டர் பெங்களூரு ஆணைய எல்லையில் வசிக்கும் மக்கள் பிரதிநிதிகள், சில அதிகாரிகளை கிரேட்டர் பெங்களூரு ஆணைய உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆலோசனைப்படி, ஜி.பி.ஏ.,வில் நியமன கவுன்சிலர் பதவியை நாங்கள் கைவிடுவோம். உறுப்பினர் குழுவில் நிதித்துறை செயலரை சேர்க்கவும் முடிவு செய்து உள்ளோம். மாநகராட்சியின் அதிகார வரம்பில் புதிய பகுதியை சேர்க்கும் போது, அந்த பகுதியில் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஜி.பி.ஏ., தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இல்லை. இவ்வாறு அவர் பேசினார். மசோதா மீது எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், ''பெங்களூரில் வசிக்கும் பிற மாவட்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அவர்களின் சொந்த ஊரில் தேர்தல் நடக்கும் போது ஓட்டு போடுகின்றனர். இது, போலியாக ஓட்டு போடுவது போன்றது. இதில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்,'' என்றார். மசோதா மீது அமைச்சர்கள், எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினர். எதிர்க்கட்சியினர் பரிந்துரை செய்வதை நிவர்த்தி செய்வதாக, சிவகுமார் கூறினார். இதையடுத்து, மசோதாவுக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை