சீக்ரெட் சிங்காரம்
சர்க்கரை மாவட்ட தலைநகர் தொகுதியில இருந்து, கடந்த லோக்சபா தேர்தல்ல சுயேச்சையாக ஜெயிச்ச பெண் எம்.பி., கடந்த ஆண்டு நடந்த தேர்தல்ல தாமரை கட்சியில சீட் எதிர்பாத்தாங்க. ஆனா, கூட்டாளி கட்சிக்கு தொகுதிய கொடுத்தாங்க தாமரைக்காரங்க. ஆனாலும் அந்த, 'மாஜி' எம்.பி., தாமரை கட்சியில சேர்ந்தாங்க. கட்சிக்காக கடுமையா உழைக்க போறேன்னு சொன்னாங்க. எம்.எல்.சி., சீட் எதிர்பார்த்தாங்க. ஆனா அவருக்கு எந்த பதவியும் கிடைக்கல. இதனால இருக்குற இடம் தெரியாம அமைதி ஆயிட்டாங்க. தாமரை பக்கம் போனதுக்கு பதிலா, கை பக்கம் போயிருக்கலாமோன்னு யோசிக்குறாங்களாம்.கை கட்சியோட முன்னாள் அமைச்சரு ஒருத்தரு இப்போ எம்.எல்.ஏ.,வாக இருக்காரு. கொலை கேசுல ஜெயிலுக்கு போயி, ஜாமின்ல இருக்காரு. மோசடி பெண் கூட தொடர்புல இருந்ததுனால, அந்த எம்.எல்.ஏ.,க்கு இப்போ மறுபடியும் சிக்கல் ஏற்பட்டு இருக்கு. கடந்த தேர்தல்ல அவரால பிரசாரம் செய்ய தொகுதிக்கு போக முடியல. ஆனாலும் மனைவியோட பிரசாரத்தால ஜெயிச்சிட்டாரு. ஆனா அடுத்த தேர்தல்ல ஜெயிப்போமான்னு அவருக்கே டவுட் வர ஆரம்பிச்சி இருக்காம். இதனால தனக்கு பதிலாக போட்டியிட மகள், மனைவிய தயார்படுத்திட்டு வர்றாராம்.
கோஷ்டி அரசியலுக்கு 'ஸ்டாப்!'
கர்நாடக தாமரை கட்சியில கோஷ்டி அரசியல், மேலிடத்துக்கு பெரிய தலைவலியாக இருந்துச்சு. கட்சியில இருந்து விஜயபுராகாரர நீக்குனதுக்கு அப்புறமா, கோஷ்டி பிரச்னைக்கு முதல் முற்றுப்புள்ளி போட்டாங்க. விஜயபுராகாரரு கட்சியில இருக்குற அப்போ, மாநில தலைவருக்கு எதிராக பேசிட்டு வந்தவங்க எல்லாம் இப்போ கப்சிப் ஆயிட்டாங்க. இன்னும் சிலர் வெளியே தெரியாம, கட்சிக்குள்ளேயே கலகம் பண்ணிட்டு இருக்காங்களாம். அவங்க மேலயும் நடவடிக்கை எடுத்து கோஷ்டி அரசியலை ஒழிச்சு கட்ட, தாமரை மேலிடம் ரெடியாகிட்டு வர்றாங்க.