பெண்ணிடம் அத்துமீறியவருக்கு தர்ம அடி
பங்கார்பேட்டை: கோலாரில் இருந்து பங்கார்பேட்டைக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம், அத்துமீறிய நபருக்கு 'தர்ம அடி' விழுந்தது. கோலாரில் இருந்து பங்கார்பேட்டைக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்சில் பெண் ஒருவர், இருவர் அமரும் இருக்கையில் இருந்தார். அவர் பக்கத்தில் ஒரு சீட் காலியாக இருந்ததை பார்த்த ஆண் ஒருவர், அந்த பெண் அருகே அமர்ந்தார். பஸ் சென்று கொண்டிருந்த போதே, அந்த பெண்ணிடம் அத்துமீறல் செய்தார். அப்பெண் கோபம் அடைந்து, அந்த நபரை அறைந்து உள்ளார். மற்ற பயணியரிடம் தெரிவிக்க, பலரும் அந்த நபரை தாக்கினர். அப்போது, பங்கார்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ் நின்றதும், அந்த நபர் இறங்கி ஓட்டம் பிடித்தார்.