மேலும் செய்திகள்
சென்னை – செங்கோட்டை போத்தனுாருக்கு சிறப்பு ரயில்
30-Sep-2026
தாம்பரம் - மானாமதுரை இன்று 'மெமு' சிறப்பு ரயில்
16-Oct-2026
பெங்களூரு: ஹாசனாம்பா கோவில் திறப்பை முன்னிட்டு, பெங்களூரு – ஹாசன் இடையில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தென்மேற்கு ரயில்வே அறிக்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹாசனில் உள்ள, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, பக்தர்களுக்கு தரிசனம் தரும் ஹாசனின், ஹாசனாம்பா கோவில், அக்டோபர் 29ம் தேதியன்று திறக்கப்படும். நவம்பர் 11ம் தேதி வரை திறந்திருக்கும். கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக, பெங்களூரு – ஹாசன் இடையே, வரும் 29ம் தேதியில் இருந்து, அடுத்த மாதம் 11ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்படும் ரயில் 06573, காலை 11:30 மணிக்கு ஹாசன் சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 3:15 மணிக்கு ஹாசனில் புறப்படும் ரயில் 06574, இரவு 7:00 மணிக்கு பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் வரும். யஷ்வந்த்பூர், நெலமங்களா, குனிகல், எடியூர், பி.ஜி.நகர், ஷ்ரவணபௌகோலா, சென்னராயப்பட்டணா ரயில் நிலையங்களில் நிற்கும். இதுபோல, அரிசிகெரே – ஹாசன் இடையிலும் இம்மாதம் 29ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் ‘மெமு’ ரயில் இயக்கப்பட உள்ளது. அரிசிகெரேயில் காலை 11:30 மணிக்கு புறப்படும் ரயில் 06291 மதியம் 12:30 மணிக்கு ஹாசனை வந்தடையும். ஹாசனில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் ரயில் 2:00 மணிக்கு அரிசிகெரே செல்லும். ஹபனகட்டா, பாகேஷ்புராவில் ரயில் நிற்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
30-Sep-2026
16-Oct-2026