உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயல் மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு

தங்கவயல் மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு

தங்கவயல் : மாணவியருக்கு, 'ஸ்வஸ்த் நாரி சஷக்த் பரிவார்' எனும் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் நேற்று தங்கவயல் பெமல் கலாஷேத்ராவில் நடந்தது. விழிப்புணர்வு கூட்டத்தை, தங்கவயல் பெமல் மருத்துவர் கோமளா துவக்கி வைத்தார். 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவியரும் பி.யு.சி., முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு, மாணவியர் என 800 பேரும், ஆசிரியர்களும் பங்கேற்றனர். அப்போது டாக்டர் கோமளா, இளம் பருவத்தில் இளம் பெண்கள் எப்படி சுகாதாரமாக இருக்க வேண்டும். மாதவிடாய் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை, உடல்நலன் பாதுகாத்தல், சத்துணவு, காசநோய், எச்.ஐ.வி., பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்கள், அறிவுத்திறன் வளர்த்தல் குறித்தும் விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில், வட்டார கல்வி அதிகாரி பிரேமா, பெமல் அதிகாரிகள் யோகானந்த், லைலா ஆகியோரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி