உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹெப்பால் சுரங்கப்பாதை திட்டம் கைவிடப்பட்டது லால்பாக் பாதை

ஹெப்பால் சுரங்கப்பாதை திட்டம் கைவிடப்பட்டது லால்பாக் பாதை

பெங்களூரு: சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு பணிந்த மாநில அரசு, லால்பாக் வழியாக முன்மொழியப்பட்ட சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கியதுடன், மாற்று வழிகளையும் ஆராய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பெங்களூரு ஹெப்பால் எஸ்டீம் மாலில் இருந்து, சென்ட்ரல் சில்க் போர்டு வரையிலான, 16.75 கி.மீ., நீளத்துக்கு சுரங்கப்பாதை, லால்பாக் பூங்கா அடியில் செல்லும் வகையில் அரசு திட்டமிட்டது. சுரங்கப்பாதையின் வெளியேற்ற பாதையை, லால்பாக் பூங்காவில் உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுரங்கப்பாதை அமைத்தால், பழமையான பாறைகள், வரலாற்று சிறப்புமிக்க கெம்பே கவுடா கண்காணிப்பு கோபுரத்தை சேதப்படுத்தும் என்று கூறி போராட்டம் நடத்தினர். இது குறித்து, அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா நேற்று அளித்த பேட்டி: சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கினால், அதனால் ஏற்படும் அதிர்வுகள், லால்பாக்கில் உள்ள பாறைகளில் விரிசல் ஏற்படக்கூடும். நிலத்தடி நீர் அமைப்பு பாதிக்கக்கூடும் என்ற கவலைகள் எழுந்தன. தற்போது, மாற்று வழித்தடம் குறித்து, அரசு ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையில், வழித்தடம் மாற்றத்தால், நிதியும் அதிகரிக்கும். சுங்கச்சாவடி கட்டணமும் ஆண்டுதோறும் அதிகரிக்கும். எனவே, மாற்றுவழியாக லால்பாக் சித்தாபூர் அல்லது வில்சன் கார்டன் பகுதியில் அமைப்பது தொடர்பாக யோசித்து வருகிறோம். திட்டத்தின் நிதியை குறைக்க, தலைமை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒப்பந்ததாரருடன் பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை