உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எஸ்.ஐ.டி., விசாரணை நன்றி தெரிவித்த ஹெக்டே

எஸ்.ஐ.டி., விசாரணை நன்றி தெரிவித்த ஹெக்டே

மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மையை வெளியே கொண்டு வந்த, காங்கிரஸ் அரசுக்கு, மஞ்சுநாதா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே இதயபூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார். தர்மஸ்தலாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கொரோனா காலத்தில் இருந்து தற்போது வரை நிறைய புத்தகங்களை நான் படிக்கிறேன். சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமியின் பல புத்தகங்களை படித்து விட்டேன். சேவை, தர்மம் தான் எங்களுக்கு முக்கியம். எங்களை நோக்கி எதிரித்துவம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. நாங்கள் சேவை செய்கிறோம்; அதனை ஒருபோதும் விளம்பரப்படுத்த நினைத்தது இல்லை. தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்ப நினைத்தவர்களுக்கு, ஏன் இவ்வளவு வெறுப்பு என தெரியவில்லை. எங்கள் மீது பக்தர்கள் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை. தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டு, உண்மையை வெளி கொண்டு வந்த கர்நாடக அரசுக்கு, எனது இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.ஐ.டி., விசாரணையில் அனைத்து உண்மையும் தெரிகிறது. மஞ்சுநாதா, அன்னப்பா சுவாமி எங்களுக்கு எப்போதும் துணை நிற்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். எஸ்.ஐ.டி., விசாரணை அமைத்ததற்காக, அரசுக்கு ஒரு முறை, வீரேந்திர ஹெக்டே நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை