உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி மாணவியர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சிறப்பு

ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி மாணவியர் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சிறப்பு

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் பெங்களூரு ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளியின், மூன்று மாணவியர், 99 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. பெங்களூரு விஜயநகர் ஹம்பிநகரில் உள்ள, ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மாணவியர் ஜைனாப் பேகூம் 99.52 சதவீதம்; தேஜாஸ்ரீ 99.20 சதவீதம்; விசக் ஷனா 99.04 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.தவிர 90 சதவீதத்திற்கு மேல் 27 மாணவ - மாணவியரும்; 85 சதவீதத்திற்கு மேல் 27 பேரும்; டிஸ்டிங்சனில் 81 பேரும்; முதல் வகுப்பில் 54 பேரும்; இரண்டாம் வகுப்பில் 36 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பள்ளியின் முதல்வர் லோகேஷ், இயக்குநர் சந்திரமோகன் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை