உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வீடு புகுந்து திருடியவர் கைது

வீடு புகுந்து திருடியவர் கைது

தங்கவயல்: தமட்ட மாக்கனஹள்ளி கிராமத்தில், வீடுபுகுந்து திருடிய ஒருவரை கைது செய்த போலீசார், தங்க செயினை மீட்டனர். காமசமுத்ரம் அருகே உள்ள தமட்ட மாக்கன ஹள்ளியை சேர்ந்தவர் ராமசந்திரப்பா ஷெட்டி. 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டில் வைத்திருந்த 33 கிராம் தங்க செயின் திருடு போயிருந்தது. காமசமுத்ரம் போலீஸ் நிலையத்தில் ராமசந்திரப்பா ஷெட்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தமட்ட மாக்கன ஹள்ளியை சேர்ந்த டி.வி.சுரேந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க செயின் மீட்கப்பட்டது. அவரை நேற்று பங்கார்பேட்டை தாலுகா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை