ஹொசகெரேஹள்ளி மேம்பாலம் விரைவில் திறப்பு
பெங்களூரு: பெங்களூரின் ஹொசகெரேஹள்ளி அருகில், புதிதாக கட்டப்பட்ட மேம்பாலப் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது. பெங்களூரின், ஹொசகெரேஹள்ளி மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாகும். இங்கு வாகன போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், ஹொசகெரேஹள்ளி அருகில், மாநகராட்சி மேம்பாலம் கட்டியுள்ளது. 500 மீட்டர் நீளமான மேம்பாலம் பணிகள், ஏற்கனவே 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. தார் பூசும் பணி பாக்கியுள்ளது. மேம்பால சாலையின், இரண்டு ஓரங்களில், 'வெட் மிக்ஸ்' போடப்பட்டுள்ளது. தார் பூசினால் பணிகள் முடிந்துவிடும். பெயின்ட் பூசுவதும் முடிந்துள்ளது. இப்பாலம் திறக்கப்பட்டால், போக்குவரத்து நெருக்கடி குறையும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு மேற்கு நகராட்சி கமிஷனர் ராஜேந்திரா, நேற்று பணிகளை பார்வையிட்டார். விரைவில் பணிகளை முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.