உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நடத்தையில் சந்தேகம் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் கைது

 நடத்தையில் சந்தேகம் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் கைது

தங்கவயல்: மனைவியின் நடத்தையை சந்தேகித்து, அவரை அரிவாளால் கண் மூடித்தனமாக வெட்டி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவின் பெத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத், 32. இவரது மனைவி ஈஸ்வரம்மா, 28. கோபிநாத்துக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்தது. இதே காரணத்தால் தம்பதி இடையே தினமும் சண்டை நடந்தது. சில நாட்களுக்கு முன், கோலார் மாவட்டம் தங்கவயல் தாலுகாவின், சின்னதகனி கிராமத்தில் வசிக்கும் தங்களின் உறவினர் வீட்டுக்கு, கோபிநாத் தன் மனைவியுடன் வந்திருந்தார். இங்கும் தம்பதி சண்டை போட்டுக்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு, ஊருக்கு புறப்பட்ட போதும், சின்னதகனி கிராமத்தின் அருகில், தம்பதிக்கிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த கோபிநாத், தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த அரிவாளால், மனைவி ஈஸ்வரம்மாவை சரமாரியாக வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த மனைவி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த உரிகாம் போலீசார், ஈஸ்வரம்மாவின் உடலை மீட்டனர். கோபிநாத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி