உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கணவர் வீட்டினர் துன்புறுத்தல் 3 மாத கர்ப்பிணி தற்கொலை

கணவர் வீட்டினர் துன்புறுத்தல் 3 மாத கர்ப்பிணி தற்கொலை

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூரில் கணவர் குடும்பத்தினரின் தொந்தரவு காரணமாக, மூன்று மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். கணவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு கே.ஆர்., புரம் பிதரஹள்ளியை சேர்ந்த பிரதீபா, 24, என்பவருக்கும், சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவின் நாயனஹள்ளி கிராமத்தை சேர்ந்த டெம்போ ஓட்டுநர் ரவி, 29, என்பவருக்கும், 2026 ஜன., 29ல் திருமணம் நடந்தது. மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த பிரதீபா, தற்கொலை செய்து கொண்டதாக, அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள், சிக்கபல்லாபூர் வந்தனர். சிந்தாமணி ஊரக போலீசில், பிரதீபாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘எங்கள் மகளின் மரணத்துக்கு, அவளுடைய கணவரின் குடும்பத்தினர் தான் காரணம். ஒரு மாதத்துக்கு முன், எங்களுக்கு போன் செய்த மகள், ‘கணவர் வீட்டினர் எனக்கு ஒரு வேளை மட்டுமே உணவு அளிக்கின்றனர். அழுகிய காய்கறிகளை உணவுக்கு பயன்படுத்தும்படி காட்டாயப்படுத்துகின்றனர்’ என்றார். ‘‘இந்த சிறிய விஷயத்தை அவர்களே சரி செய்து கொள்வர் என நினைத்து அமைதியாக இருந்துவிட்டோம். இன்று எங்கள் மகளை இழந்து நிற்கிறோம்,’’ என்றார். வழக்கு பதிவு செய்த போலீசார், ரகுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !