உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கழுத்தை அறுத்து மனைவி கொலை நடத்தை சந்தேத்தில் கணவர் ஆத்திரம்

கழுத்தை அறுத்து மனைவி கொலை நடத்தை சந்தேத்தில் கணவர் ஆத்திரம்

கோலார்: மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, பிள்ளைகளின் கண்ணெதிரில் மனைவியின் கழுத்தை அறுத்து, கணவர் கொலை செய்தார். கோலார் மாவட்டம், சீனிவாசபுரா தாலுகாவின், கெந்தட்டி கிராமத்தில் வசிப்பவர் ராமசந்திரா, 31, சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறார். இவரது மனைவி ஸ்னேஹா, 25. தம்பதிக்கு, 2 வயதில் இரட்டை பெண் குழந்தைகளும், ஐந்து மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இதற்கு முன் வழக்கொன்றில், ராமசந்திரா கைதாகி, சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக மனைவியின் நடத்தையில், ராமசந்திராவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வேறு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதுவிஷயமாக தம்பதிக்கிடையே, தினமும் சண்டை நடந்தது. இதற்கிடையே, நேற்று முன் தினம், தம்பதி தங்கள் குழந்தைகளுடன், பாட்டியை பார்க்க மூரன்டஹள்ளி கிராமத்துக்கு வந்தனர். அப்போதும் தம்பதிக்கிடையே வாக்குவாதம் நடந்தது. பாட்டியை பார்த்து விட்டு இரவு 7:00 மணிக்கு ஆட்டோவில் கெந்தட்டிக்கு புறப்பட்டனர். ஆட்டோவிலும் மனைவியுடன் ராமச்சந்திரா தகராறு செய்தார். சீனிவாசபுரா டோல்கேட் அருகில், ஆட்டோவை நிறுத்தி இறங்கிய ராமசந்திரா, குழந்தைகளின் கண்ணெதிரில் மனைவியின் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், விரட்டி சென்று ராமசந்திராவை பிடித்தனர். போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த சீனிவாசபுரா போலீசார், கொலையாளியை கைது செய்தனர். தாயின் உடல் அருகே அழுதபடி இருந்த, மூன்று குழந்தைகளையும் தங்கவயலின் குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். சம்பவ இடத்தை, கோலார் எஸ்.பி., கன்னிகா சிக்ரிவால் பார்வையிட்டு விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி