உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மண் வெட்டியால் அடித்து மனைவியை கொன்ற கணவர்

மண் வெட்டியால் அடித்து மனைவியை கொன்ற கணவர்

மாரத்தஹள்ளி: நடத்தையில் சந்தேகித்து, மனைவியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே பனத்துார் கிராமத்தில் வசிப்பவர் பசவராஜ், 42. இவரது மனைவி துக்கம்மா, 36. இரண்டு ஆண்டுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பசவராஜ் வேலைக்கு செல்லவில்லை. வீட்டு வேலைக்கு சென்று துக்கம்மா குடும்பத்தை கவனித்தார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று அதிகாலை ஏற்பட்ட தகராறில், துக்கம்மாவை, பசவராஜ் சரமாரியாக தாக்கினார். வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து மனைவி தலையில் பலமாக அடித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த துக்கம்மா உயிரிழந்தார். மாரத்தஹள்ளி போலீசார், பசவராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ