உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நான் ராஜினாமா செய்ய மாட்டேன் எம்.எல்.ஏ., முனிரத்னா அறிவிப்பு

நான் ராஜினாமா செய்ய மாட்டேன் எம்.எல்.ஏ., முனிரத்னா அறிவிப்பு

பெங்களூரு: ‘‘முதல்வரின் தம்பி எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், நான் ராஜினாமா செய்ய மாட்டேன்,’’ என, ஆர்.ஆர்.நகர் பா.ஜ., – எம்.எல்.ஏ., முனிரத்னா திட்டவட்டமாக கூறியுள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ், கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தோற்றதில் இருந்து, எனக்கு தினமும் தொல்லை கொடுத்து வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட்டு தோற்ற குஸ்மாவை, எப்படியாவது எம்.எல்.ஏ., ஆக்க வேண்டும் என்று சுரேஷ் நினைக்கிறார். மனரீதியாக எனக்கு தொல்லை கொடுத்து, ராஜினாமா செய்ய வைக்கலாம் என நினைக்கின்றனர். சுரேஷ் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், நான் ராஜினாமா செய்ய மாட்டேன். அமைச்சரவையில் பெண்களுக்கான ஒரு இடம் காலியாக உள்ளது. குஸ்மாவை எம்.எல்.சி., ஆக்கி, அவருக்கு அமைச்சர் பதவியை வழங்கட்டும். அதை விட்டு சிறுபிள்ளை போல சுரேஷ் அரசியல் செய்ய கூடாது. சுரேஷ், இரண்டு முறை எம்.பி.,யாக இருந்தவர். அதை அவர் மறக்க கூடாது. ஒரு குடும்பத்துக்காக அவர் எத்தனை குடும்பத்தை அழிக்க உள்ளார் என தெரியவில்லை. சிவகுமாரும், சுரேஷும் மனது வைத்திருந்தால், ஆர்.ஆர்.நகர் தொகுதி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என நினைத்து, தொகுதியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் உள்ளனர். சுரேஷுடன் அவரது மனைவி, பிள்ளைகள் இருந்திருந்தால், அவர் இதுபோன்று கீழ்தரமான நிலைக்கு செல்ல மாட்டார். இனியாவது அவர் கண்ணியத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை