இந்திய ராணுவம் நம் பெருமை ஜமீர் அகமது கான் பெருமிதம்
விஜயநகரா: “இந்திய ராணுவம், நம் பெருமை. தன் சக்தி மற்றும் பராக்கிரமத்தை எதிரி நாட்டுக்கு காட்டியுள்ளது,” என, மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.விஜயநகராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:காஷ்மீரின் பஹல்காமில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அப்பாவிகளின் உயிர்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பறித்தனர். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து, இந்திய ராணுவம் தன் சக்தி மற்றும் பராக்கிரமம் என்ன என்பதை, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உணர்த்தியுள்ளது.இந்திய ராணுவம், நம் பெருமை. இதன் அதிரடி நடவடிக்கை பாராட்டத்தக்கது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளது. நம்மை சீண்டினால் பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும் பிழைக்க முடியாது என, நம் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவில் அமைதி இன்மையை உருவாக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும். இவர்களுக்கு எதிரான போராட்டத்தில், நாம் அனைவரும் மத்திய அரசுடன் துணை நிற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.