உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜனார்த்தன ரெட்டி அடைப்பு

பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜனார்த்தன ரெட்டி அடைப்பு

பெங்களூரு : ஓபுலாபுரம் மைனிங் நிறுவனத்தின் சட்டவிரோத சுரங்கத்தொழில் வழக்கில், ஹைதராபாத்தின் சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, மற்றொரு வழக்கு விசாரணைக்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.ஆந்திராவின் அனந்தபூரில் உள்ள ஓபுலாபுரம் மைனிங் சட்டவிரோத சுரங்கத்தொழில் தொடர்பான விசாரணையில், முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 10 லட்சம் அபராதம், ஓபலாபுரம் மைனிங் நிறுவனத்துக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, இம்மாதம் 6ம் தேதி அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரெட்டி ஹைதராபாத் சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.பெலகேரியில் இரும்புத்தாது காணாமல் போனது தொடர்பாக, ஜனார்த்தன ரெட்டி மீதான மற்றொரு வழக்கு, பெங்களூரின் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, ஜனார்த்தன ரெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதனால், அவரை பெங்களூரு போலீசார், ஹைதராபாத் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, சஞ்சலகுடா சிறையில் இருந்து, பெங்களூரு அழைத்து வந்தனர். நேற்று மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.விசாரணை நடத்திய நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், வழக்கு தொடர்பான விசாரித்தார். போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரை பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதையடுத்து,, பரப்பன அக்ரஹாரா சிறையில், ரெட்டி அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ